ஜெனரல்
-
data-chart
சர்வதேச மகளிர் தினம்

மேலே காட்டப்பட்டுள்ளபடி, ஆண்களுடன் ஒப்பிடும் போது,  இலங்கையில் பெண்  தொழிலார்களின்  சந்தை வாய்ப்புகள் அவர்களை விட பாதியாகவும், வேலையின்மை வீதம் ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. 

பெண்களுக்கான வேலையில்லாத் திண்டாட்டத்தில் 82%, 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களிடம் காணப்படுகிறது.  இது ஏனைய  வயதுப் பெண்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட ஏழு மடங்காகும். 


20 மற்றும் 40 வயதிற்கிடைப்பட்ட பெண்களின் வேலையின்மை சதவீதம் அதே வயதுடைய ஆண்களுடன் ஒப்பிடுகையில் சராசரியாக நான்கு மடங்காக காணப்படுகிறது.  

அரசினால் வழங்கப்படும் மகப்பேறு கால விடுமுறை சலுகைகளின் செலவினங்கள் அரசின் ஏனைய சமூக நலத் திட்டங்களை விட கணிசமாகக் குறைவாகும். 


2021 ஆம் ஆண்டு நிலவரப்படி  மகப்பேறுகால விடுமுறை சலுகைகளுக்கான செலவுகள்  வரி வருமானத்தில் 0.5 சதவீதமாகும்., ஆனால் சமுர்த்தி கொடுப்பனவுகள் வரி வருமானத்தில் 4.2 சதவீதத்தை உள்ளடக்குகின்றன. 

1952 (எண். 103) இல் இலங்கை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மகப்பேறு பாதுகாப்பு மாநாட்டு உடன்படிக்கையை அங்கீகரித்தபோது , மகப்பேறுகால விடுமுறை சலுகைகளை ஆதரிப்பதாக உறுதியளித்தது. 

2023-03-08
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்