ஜெனரல்
-
data-chart
தலைப்பு: பெப்ரவரி மாத இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் 33% உறுதிமொழிகளை 'நிறைவேற்றத்' தவறியுள்ளது. உபதலைப்பு: 'நிறைவேற்றப்படாத' உறுதிமொழிகள் பல ஆளுகையை மேம்படுத்துவது தொடர்பானவை

வெரிட்டே ரிசர்ச்சின் ' IMF கண்காணிப்பானின்' பெப்ரவரி மாத புதுப்பிப்பின்படி, இலங்கை அதன் சர்வதேச நாணய நிதியத் (IMF) திட்டத்தில் 2024 பெப்ரவரி இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டிய உறுதிமொழிகளில் 33% ஐ நிறைவேற்றத் தவறியுள்ளது.

'நிறைவேற்றப்படாதவை' என வகைப்படுத்தப்பட்டுள்ள இவ் உறுதி மொழி ல ஆளுகையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட உறுதிமொழிகள் என்பதை IMF கண்காணிப்பான் வெளிப்படுத்துகிறது. தகவல்களை வெளியிடுவது தொடர்பான உறுதிமொழிகள் (வெளிப்படைத்தன்மை) மற்றும் ஆளுகையை மேம்படுத்தும் சட்டத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பான உறுதிமொழிகளும் இதில் அடங்கும். ​

மோசமான ஆளுகையே இலங்கையின் பொருளாதார  நெருக்கடிக்கு மையக் காரணி என்பதை சர்வதேச நாணய நிதியம் (IMF) அடையாளம் கண்டுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையிலான ஆளுகை கண்டறியும் மதிப்பீட்டைக் கொண்ட முதல் ஆசிய நாடாக இலங்கை காணப்படுகிறது.

36% உறுதிமொழிகளின் நிலை 'அறியப்படாத' என வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது அவற்றின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு போதுமான தரவு கிடைக்கவில்லை.  பெப்ரவரி இறுதியில், 31% உறுதிமொழிகள் 'நிறைவேற்றப்பட்டுள்ளன'.

 

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணைக்கான நிதி 2023 டிசம்பரில் வழங்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை பெப்ரவரி இறுதிக்குள் 45 உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும். IMF கண்காணிப்பான் இவற்றில் 14ஐ (31%) 'நிறைவேற்றப்பட்ட' உறுதி மொழிகள் எனவும், 15ஐ (33%) 'நிறைவேற்றப்படாத' மற்றும் 16 ஐ (36%) ' அறியப்படாத'  உறுதிமொழிகள்  என்றும் வகைப்படுத்தியுள்ளது.

 

"நிறைவேற்றப்படாத" 15 உறுதிமொழிகளில், ஆறு உறுதிமொழிகள் தகவல்களை வெளியிடுவது அல்லது வெளிப்படைத்தன்மை தொடர்பான உறுதிமொழிகளாகும். இவற்றில் நான்கு புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளாகும்: (அ) வங்கிச் சட்டம் குறித்து பாராளுமன்ற ஒப்புதலைப் பெறுதல்; (ஆ) பணவீக்கத்திற்கு ஏற்ப தானியங்கி முறையில் கலால் வரிகளை குறியீடு செய்வதை அறிமுகப்படுத்துதல்; (இ) கடன் முகாமைத்துவ முகவர் நிலையமொன்றை அமைப்பதற்கு சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்துதல். (ஈ) அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல். 2022 செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட போதிலும், ஆளுகை தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நான்கு நடவடிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

 

IMF கண்காணிப்பான் என்பது இலங்கையின் 17 வது சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் தொடக்கத்தில் இனங்காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் இலங்கையின் முதல் மற்றும் ஒரே தளமாகும். இதை வெரிட்டே ரிசர்ச்சின் manthri.lk இணையதளத்தினூடாக பொதுமக்கள் அணுகலாம். IMF Tracker – Manthri.lk.

2024-03-14
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்