ஜெனரல்
-
data-chart
சுகாதாரத் துறையில் அரசாங்கம் தனது கொள்கை வாக்குறுதிகளை 2021 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளதா?

தேசிய கொள்கை கட்டமைப்பு: நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு என்பது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கை ஆவணமாகும். எனவே, இந்த கொள்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளை செயல்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. இந்த கொள்கைகளில் பெரும்பாலானவற்றை செயல்படுத்துவதற்கு, ஆரம்ப கட்டமாக தேசிய வரவு-செலவு திட்டம் மூலம் அரசாங்கம் பணத்தை ஒதுக்க வேண்டும்.

இந்த விளக்கப்படமானது  சுகாதாரத் துறையில் கொள்கைகளையும் 2021ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகளையும்  வழங்குகிறது.

முழு ஒதுக்கீடு - கொள்கை திட்டத்தின் அனைத்து முன்மொழிவுகளுக்கும் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள். இருப்பினும், அனைத்து ஒதுக்கீடுகளும் பண அடிப்படையில் போதுமானவையா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

பகுதி ஒதுக்கீடு - கொள்கை திட்டத்தின் சில அம்சங்களுக்கான ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை

ஒதுக்கீடு இல்லை - முன்மொழியப்பட்ட கொள்கைக்கு ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

குறிப்பு: வரவு-செலவு திட்ட ஒதுக்கீடு தேவைப்படும் கொள்கைகள் மாத்திரமே இந்த ஆய்விற்குரியதாக கருதப்படுகின்றன.

விதிமுறைகள், ஆளுகை மற்றும் சட்ட கட்டமைப்புகள் போன்றவற்றின் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ள எந்தவொரு கொள்கைகளும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

For more details on the policy "Upgrade NHSL to international levels & all hospital in each district to NHSL level" see the video below.

For a comprehensive understanding of each policy; details on allocations; and a comparison between years, refer our Public Report on Budget 2021: Assessment on whether the expenditure allocations and taxation policies are in line with the government’s policy

2021-04-05
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்