ஜெனரல்
-
data-chart
2020 இல் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை ஏன் அதிகரித்தது?

2019 மற்றும் 2020 காலகட்டத்தில் இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 2019 ல் ரூபா 1,016 பில்லியனில் இருந்து 2020 ல் ரூபா 200 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது ரூபா 1,074 பில்லியன் எனும் அதிகரிப்பு ஆகும். வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையின் அதிகரிப்புக்கு  ரூபா 526 பில்லியன் வருமான வீழ்ச்சி மற்றும் ரூபா 548 பில்லியன் செலவின அதிகரிப்பு என்பன காரணமாக இருக்கலாம்.

 

அரச வருமானத்தில் வீழ்ச்சி

அரச வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட முக்கிய காரணம், பெறுமதி சேர் வரி (ரூபா 210 பில்லியன்), மோட்டார் வாகனத்தின் மீதான உற்பத்தி வரி (ரூபா 82 பில்லியன்), தேச கட்டுமான வரி (ரூபா 68 பில்லியன்) நிறுவன வருமான வரி (ரூபா 46 பில்லியன்), நிறுத்தி வைத்தல் வரி (ரூபா 40 பில்லியன்), பொருளாதார சேவை கட்டணம் (ரூபா 40 பில்லியன்) மற்றும் உழைக்கும் போதே செலுத்தும் வரி (ரூபா 34 பில்லியன்)போன்ற வரிகளின் சேகரிப்பில் ஏற்பட்ட குறைவே ஆகும். இருப்பினும், சிறப்பு பண்டைத் தீர்வை  (ரூபா 12 பில்லியன்) மற்றும் இறக்குமதித் தீர்வைகள் (ரூபா16 பில்லியன்) ஆகியவற்றிலிருந்தான வரி வருமானத்தில் மிதமான அதிகரிப்பு இருந்துள்ளது. வருமான  மாற்றங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் பின்வருமாறு, (அட்டவணையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது)

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வருமான வீழ்ச்சிக்கு பங்களித்த  பல முக்கிய வரி கொள்கை மாற்றங்களும் இருந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய வரி கொள்கை மாற்றங்களாவன:

 

  1. தேச கட்டுமான வரி, பொருளாதார சேவை கட்டணம் மற்றும் உழைக்கும் போதே செலுத்தும் வரி ஆகியவற்றை நீக்குதல்.
  2. குடியிருப்பாளர்களுக்கு நிறுத்தி வைத்தல் வரி விலக்கு அளிக்கப்பட்டது.
  3. நிலையான நிறுவன வருமான வரி வீதமானது  28 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறைக்கப்பட்டதோடு  கட்டுமானம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளுக்கான வரி வீதங்களும் குறைக்கப்பட்டு, தகவல் தொழிநுட்பம் (IT) மற்றும் விவசாயம் போன்ற ஏனைய துறைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.
  4. பெறுமதி சேர் வரி (நிதி சேவைகள் தவிர) 15 சதவீதத்திலிருந்து  8 சதவீதமாகக் குறைக்கப்பட்டதோடு  VAT பதிவுக்கான தொடக்கநிலையானது காலாண்டுக்கு ரூபா 3 மில்லியனிலிருந்து (ஆண்டுக்கு ரூபா 12 மில்லியன்) இலிருந்து ரூபா 75 மில்லியனாக (ஆண்டுக்கு ரூபா 300 மில்லியன்) உயர்த்தப்பட்டது.

மேலும், 2020 ஏப்ரல் மாதம் முதல் பெரும்பாலான மோட்டார் வாகன இறக்குமதிகளை அரசாங்கம் தடைசெய்தது, இது மோட்டார் வாகனங்களுக்கான உற்பத்தி வரியை கணிசமாகக் குறைக்க வழிவகுத்தது.

 

அரச செலவினங்களில்  அதிகரிப்பு

அரச செலவினங்களிலான அதிகரிப்பு முக்கியமாக; மூலதனச் செலவினம் (ரூபா 176 பில்லியன்), மாற்றல் கொடுப்பனவுகள் (ரூபா 166 பில்லியன்), சம்பளங்களும் படிகளும் (ரூபா 108 பில்லியன்) மற்றும் வட்டி கொடுப்பனவுகள் (ரூபா 79 பில்லியன்) போன்ற செலவினங்களில் ஏற்பட்ட அதிகரிப்பாகும். செலவின மாற்றங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் பின்வருமாறு, (அட்டவணையின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது)

2020 நவம்பர்  மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 வரவு செலவுத் திட்டத்தில், சமுர்த்தி மாநில அமைச்சின் ஊடாக கோவிட் -19 நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கமானது ரூபா 35 பில்லியனை ஒதுக்கீடு செய்தது. மேலும், அரசினால் மேற்கொள்ளப்பட்ட்ட 160, 000 திறனற்ற ஊழியர்கள் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகளின் நியமனமானது ஆண்டொன்றுக்கு ரூபா 65 பில்லியன் எனும் மேலதிக செலவினங்களை ஏற்படுத்தியது.

(பார்க்கவும், https://publicfinance.lk/en/topics/New-Government-Recruitment-Schemes:-An-increased-burden-on-taxpayers-1620677894)

 

குறிப்பு:2020 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையின் படி  2020 மற்றும் 2019 க்கான வரவு செலவுத் திட்ட  பற்றாக்குறை புள்ளிவிவரங்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன, ஏனெனில் மத்திய வங்கியின் எண்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒத்துப்போகவில்லை, எனவே அவற்றை பல ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பயன்படுத்த முடியாது. இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு எங்கள் முந்தைய விளக்கங்களை பார்க்கவும் https://publicfinance.lk/en/topics/2020-Records-the-Highest-Budget-Deficit-Since-1982-1620901757  

 

*அரச வருமானத்தை விட அரச செலவினம் அதிகமாக இருக்கும் போது வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

மூலம்: ஆண்டறிக்கை (2020), இலங்கை மத்திய வங்கி

 

 

 

அட்டவணை 2: அரச செலவினம் (2019 மற்றும் 2020)

பெறுமதிகள் ரூபா மில்லியனில்

பிரிவு

2019

2020

தற்காலிகமானது

Decline in 2020

வரி வருமானம்

1,734,925

1,216,542

518,383

வெளிநாட்டு வர்த்தகத்தின் மீதான வரிகள்

280,965

312,334

-31,369

இறக்குமதிகள்

98,427

114,183

-15,756

இறக்குமதி தீர்வை (மொத்த)

98,427

114,183

-15,756

குறைவான தீர்வை தள்ளுபடி

-

 -

                  -  

PAL/RIDL/SCL/ஏனையவை

182,538

198,151

-15,613

உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள்

843,355

555,718

287,637

GST/VAT

443,877

233,786

210,091[DM1] [FM2] 

உள்நாட்டு  GST/VAT

273,963

148,061

125,902

இறக்குமதிகள் மீதான  GST/VAT

169,914

85,725

84,189

உற்பத்தி வரி

399,478

321,932

77,546

மதுபானம் மீதான  உற்பத்தி வரி

115,443

120,990

-5,547

சிகரெட், புகையிலை மீதான உற்பத்தி வரி

87,367

94,345

-6,978

பெற்றோலியம் மீதான  உற்பத்தி வரி

61,740

53,111

8,629

MV மற்றும் ஏனையவை மீதான  உற்பத்தி வரி

134,

53,486

81,441

 

தேசிய பாதுகாப்புக் கட்டணம்

 -  

                  -  

                  -  

அனுமதிப்பத்திர கட்டணம்

n/a

n/a

 n/a

தேறிய வருமானம் மற்றும் இலாபங்கள் மீதான வரிகள்

427,700

268,249

159,451

நிறுவனம்

261,089

214,819

46,270

நிறுவனமல்லா

11,514

13,517

-2,003

வட்டி மீதான வரி

50,351

9,989

40,362

      மூலதன இலாப வரி

n/a

n/a

 n/a

      முத்திரை வரி/ செஸ் தீர்வை/ SRL/NBT/DL/TL

182,905

80,241

102,664

  பற்று வரி

                    -  

 

                  -  

   வறியற்ற வருமானம்

155,974

151,417

4,557

   நடைமுறை வருமானம்

155,974

151,417

4,557

ஆதன  வருமானம்

46,404

60,984

-14,580

வாடகை

4,727

12,055

-7,328

வட்டி

13,819

7,297

6,522

இலாபங்கள், பங்கிலாபங்கள்

27,857

17,624

10,233

தேசிய லொத்தர்

n/a

n/a

 n/a

மத்திய வங்கி வருமான மாற்றல்கள்

-

24,009

24,009

சமூகப் பாதுகாப்பு அன்பளிப்புகள்

28,985

32,417

-3,432

கட்டணம் மற்றும் நிர்வாக அறவீடுகள்

73,884

47,370

26,514

ஏனையவை

6,701

10,646

-3,945

மூலதன வருமானம்

-

-

 -

மொத்த வருமானம்

1,890,899

1,367,960

522,939

மானியங்கள்

7,909

5,348

2,561

மொத்த வருமானம்

1,898,808

1,373,308

525,500


 

 

அட்டவணை 2: அரச செலவினம் (2019 மற்றும் 2020)

பெறுமதிகள் ரூபா மில்லியனில்

 

 

வருடம் 

2019

2020

Increase in 2020

 

மீண்டெழும் செலலினம்

2,424,582

2,671,786

247,204

 

பொருட்கள் சேவைகள் மீதான செலவினம்

848,278

974,351

126,073

 

சம்பளங்களும் வேதனாதிகளும்

686,452

794,158

107,706

 

 

சிவில் நிர்வாகம்

420,300

509,555

89,255

                        

தேசிய பாதுகாப்பு

266,152

284,603

18,451

பிற பொருட்கள் மற்றும் சேவைக் கொள்வனவு

161,826

180,193

18,367

சிவில் நிர்வாகம்

82,489

100,006

17,517

தேசிய பாதுகாப்பு

79,338

80,187

849

செலவினங்களுக்கான ஒதுக்கீடு

-

 -

 -

வட்டிக் கொடுப்பனவுகள்

901,353

980,302

78,949

வெளிநாட்டு

233,970

266,679

32,709

                   உள்நாட்டு

667,383

713,623

46,240

மாற்றல் கொடுப்பனவுகள்

551,524

717,133

165,609

குடித்தனம்

456,241

610,486

154,245

                   உப தேசிய அரசாங்கங்கள்

-

 -

 -

நிதிசாரா பொது தொழில்முயற்சிகள்

26,153

17,712

-8,441

நிறுவனங்கள் மற்றும் பிற

69,130

88,936

19,806

மூலதனச்செலவினம்

619,069

795,368

176,299

நிலையான மூலதனச் சொத்துக்கள் கொள்வனவு

385,366

483,543

98,177

மூலதன மாற்றல்கள்

239,688

307,917

68,229

நிறுவகங்கள்

200,172

254,384

54,212

நிதிசாரா பொது தொழில்முயற்சிகள்

20,704

34,365

13,661

உப தேசிய அரசாங்கங்கள்

18,812

19,168

356

வெளிநாட்டு

1,951

n/a

 n/a

                    

செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள்

-

-

 -

ஏனையவை

-5,985

3,907

9,892

 

கடன் மறை மீள் கொடுப்பனவுகள்

-4,933

-3,552

1,381

முற்பணக் கணக்குகள் மூலமாக தேறிய கடன்

1,172

-529

-1701

பொது தொழில்முயற்சிகள் கடன்

12,166

16,405

4,239

பொது தொழில்முயற்சிகள் கடன் கொடுப்பனவு

-18,271

-19,429

-1,158

செலவின மீள் கட்டமைப்பு

-

 -

 -

மொத்தம்

2,915,291

3,463,602

548,311

மூலம்: ஆண்டறிக்கை (2020), இலங்கை மத்திய வங்கி

2021-09-14
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்