ஜெனரல்
-
data-chart
2022 – 2027 காலப்பகுதியில் இலங்கையின் வருடாந்த சராசரி வெளிநாட்டுக் கடன் சேவை மீள்கொடுப்பனவுகள் ஐ.அ.டொ 4.4 பில்லியன்

2010 முதல் 2021 வரை இலங்கை அரசாங்கத்தின் உண்மையான வருடாந்த வெளிநாட்டுக் கடன் சேவைக் கொடுப்பனவுகளை விளக்கப்படம் காட்டுகிறது. அத்துடன் 2022 முதல் 2027 வரையிலான எதிர்வுகூறப்படும் வெளிநாட்டுக் கடன் சேவைக் கொடுப்பனவுகளும் விளக்கப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடன்களின் முதன்மைக் கொடுப்பனவுகள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளின் விபரங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. 2011 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் வருடாந்த வெளிநாட்டுக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் சராசரியாக ஐ.அ.டொ 2,884 மில்லியனாக உள்ளது. எனினும் 2019ம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் சேவைக் கொடுப்பனவுகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டு ஐ.அ.டொ 4,600 மில்லியனை விட அதிகரித்தது. 2018ம் ஆண்டின் ஐ.அ.டொ 3,243 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 42% அதிகரிப்பாகும். 2022 முதல் 2027 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் வருடாந்த வெளிநாட்டுக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் சராசரியாக ஐ.அ.டொ 4,383 மில்லியனாக இருக்கும் என நிதியமைச்சு எதிர்வுகூறியுள்ளத.

2022-09-21
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்